Saturday, February 4, 2012

அவனும் மனிதன் தானே - 1 பாகம்


பன்முகம் கொண்ட மனிதர்கள் இந்த சென்னையில் இருகிறார்கள்
அவர்கள் எல்லோரிடமும் நாம் பேசியதோ பழகியதோ இல்லை, 
அவ்வாறு இரு வெவ்வேறு முகம் கொண்ட சென்னை வாசிகளின் கதை இது,

மணி காலை 6 
சென்னை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக விடிந்து கொண்டிருக்கிறது

பேப்பர் போடும் சிறுவனில் இருந்து மெரினா கடற்கரையில் உடம்பில் சர்க்கரையின் அளவை குறைக்க நடந்து கொண்டிருக்கும் பெரியவர்கள் வரை
அந்த நாளை துவக்கி கொண்டிருக்கிறார்கள்

6 மணி: நபர் ஒன்று 

தலைக்கு மேல் காதுக்குள் இரையும் படி அலராம் அடித்தாலும் அதை அணைத்து விட்டு தூங்கும் அன்பர்களுக்கு மத்தியில் இவர் சற்று வித்யாசமானவர் 

அலாரம் ஒலிக்கும் முன்னரே எழுந்து அதை அணைத்து விட்டு மீண்டும் உறங்கும் உயர்ந்த மனிதர் 

இவர் துயில் எழும் முன்னர் இவரை பற்றி சில:

தனக்கென்று வாழ்வில் எந்த ஒரு லட்சியமும் இல்லாத 23 வயது வாலிபன், 
கடனே என்று பொறியியல் படித்து விட்டு எந்த பயனும் இல்லாமல் 
பெற்றோரின் காசில் தன் வண்டிக்கு பெட்ரோல் போட்டு கொண்டிருக்கும் 
மிக சாதாரண நபர்களில் இவனும் ஒருவன்

மிடில் கிளாஸ் வாழ்க்கை என கடைசி வரை தலையில் எழுதபடா விதி இருக்கும் சாதாரண பெற்றோர்கள் இவனை என்ன தான் செய்வார்கள் பாவம்

மனதிற்குள் மன்மதன் என்கிற நினைப்பு,

இவர் பெயரை சொல்ல மறந்து விட்டேனே இவர் தான் சுனில் என்கிற 
சுனில் குமார்

6 மணி: நபர் இரண்டு 

"காலையில் எழுவதில் 10 நிமிடம் கழித்து எழுவோம் என நினைக்கிறோமோ  அப்போது தான் ஆரம்பிக்கிறது அன்றைய
தினத்தின் முதல் தோல்வி" 

என்ற கொள்கையினை பின்பற்றுபவன்.

இவர் எழுந்து தனது காலை பணிகளை முடிக்கும் முன் இவரை பற்றி சில:

சந்துரு என்கிற சந்திர சேகர், பொறியியல் படிப்பை முடித்து விட்டு முடித்த கையொடு கல்லூரியே இவனுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்தது 
உயர்தர நடுத்தர வர்க்கம், வீட்டில் நல்ல வசதி வாய்ப்புகள் இருந்தாலும் 
மகன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று ஆசை படும் பெற்றோர்களில்
இவர்களுக்கும் இடம் உண்டு

ஒரு சின்ன கம்பனியில் வேலைக்கு சேர்ந்து 6 மாதம் தான் இருக்கும்
அங்கு தனக்கென்று ஒரு நல்ல பெயரை உருவாக்கி வைத்து கொண்டான் 

"ச்சே" என்று சொல்கிற அளவுக்கு கேட்ட பழக்கவழக்கங்கள் இல்லை என்றாலும் புகை பிடிக்கும் பழக்கம் உண்டு 

சந்துரு என்றால் அப்படி அந்த பெயரில் என்ன தான் இருக்கிறதோ தெரியவில்லை பெண்கள் இவன் பெயரை சொல்லி அழைத்து இவனையே
சுற்றி சுற்றி வருவார்கள்

ஆனால் அவன் யாரையும் கண்டு கொள்வது கிடையாது,
அவனுக்கு பெண்கள் என்ற பெயரை கேட்டாலே வெறுப்பு தான் வரும்
அதனால் தான் என்னவோ இவனையே சுற்றி வந்தார்கள்

நம்மூர் பெண்களை பற்றி சொல்லவா வேண்டும்,
யார் அவர்கள் பின்னல் சுற்றுபவர்களை சீண்ட கூட மாட்டார்கள்,
அவர்களை கண்டு கொல்லாத பையனை நினைத்து உருகுவார்கள்

9  மணி : அசோக் பில்லர் பஸ் ஸ்டாப்

இந்த உலகத்தில் எதவுமே நடக்காதது போல் காதில் வயரை மாட்டிகொண்டு அவர்களை அழைத்து செல்லும் வாகனத்திற்காக காத்திருக்கும் சாப்ட்வேர் பெண்மணிகள்,

கவலை என்றால் என்ன வென்று கேட்கும் வயதில் முதுகில் பொதி தூக்கும் பள்ளி செல்லும் சிறுவர்கள்,

கடமையே கண் போன்றது என்று தான் வேலையில் கவனமாக இருக்கும்
அதாவது முன்னாடி நிற்கின்ற சிவப்பு சுடிதார் எங்கு வேலை பார்க்கிறாள்,
மஞ்சள் சுடிதார் என் இன்னும் வரவில்லை என்று தனது வேலையை பார்த்து
கொண்டிருக்கும் இளைஞர் பட்டாளம்,

சென்னை வாழ்கையை நொந்து கொண்டு வேலைக்கு செல்லும் பெருசுகள் என அனைவருக்கும் இடம் கொடுக்கும் பேருந்து நிறுத்தம் அது,

சந்துரு செல்லும் D70 பேருந்து 9 30  மணிக்கு அந்த பேருந்து நிறுத்தத்தை வந்தடையும் அவன் வழக்கம் போல 9 15 மணிக்கு வந்தடைந்தான்

வழக்கம் போல் அன்றும் அனைவரும் தம் பணிகளை சிறப்பாக செய்து
கொண்டிருந்தனர்

சந்துருவின் அருகில் ஒரு 45 வயது மதிக்கதக்க ஒரு நபர் அவன் அருகில்
நின்று கொண்டிருந்தார்

அவர் ஏதோ பதட்டத்துடன் நிற்பது மட்டும் அவனுக்கு புரிந்தது,
அந்த நேரம் நான் வழக்கமாக செல்லும் பேருந்து வந்தது 

வழக்கம் போல இன்றும் கூட்டம் கட்டுகடங்காமல் இருந்தது
பாவம் நடத்துனர் ஏன் டா?? இந்த வேலைக்கு வந்தோம் என்கிற ஏக்கம்
அவர் கண்களில் இருந்தது

நான் பேருந்தில் உள்ளே இடிச்சு புடிச்சு உள்ளே நுழைந்துவிட்டேன்,
அதே பேருந்தில் அவரும் அவசரமாக ஏற முற்பட்டார்
அதற்குள் நடத்துனர் விசில் அடிக்கும் முன்பே ஓட்டுனர் பேருந்தை
இயக்க தொடங்கி விட்டார்

அதே நேரத்தில் ஒரு காலை மட்டும் படியில் வைத்து நிற்று கொண்டிருந்த 
அவர் நிலை தடுமாறி தலை குப்பற கீழ விழுந்தார்

அவர் தலையில் அடிபட்டு ரத்தம் சொட்ட ஆரம்பித்தது,
அந்த பெரியவர் அரை மயக்கதிற்கே சென்றார் 

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அந்த இடத்தில் இருந்த
அனைவரையும் பதறவைத்தது 

நடத்துனர் சுதாரித்து கொண்டு விசில் அடிக்க வண்டி நின்றது
நடந்தது என்னவென்று புரியாமல் பேருந்தினுள் அகப்பட்ட புழுக்களை போல
உள்ளே நின்று கொண்டிருந்த அனைவரின் கவனமும் ஒரு சேர அந்த 
இடத்தை ஆக்கிரமித்தது

படியில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள்,
அவசரமாக இறங்கினார்கள் நானும் செய்வதறியாது அவர் அருகில்
சென்றேன் 

இந்த பதட்டமான சூழ்நிலையில் பேருந்தில் உள்ள அனைவரும் 
ஓட்டுனரை பல்வேறு மொழிகளில் திட்டி தீர்த்து கொண்டிருந்தனர்

அதற்குள் அந்த இடத்தில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஓடி வர
அந்த இடமே ஏதோ விபரிதம் நடந்து விட்டது என அனைவரும் 
அறியும் வகையில் இருந்தது 

அந்த அதிகாரி தனது அழைபேசி எடுத்து தொடர்பு கொண்டு,
அம்புலன்சை அனுப்பி வைக்கும்மாறு உத்தரவிட்டார்

அதற்குள் அருகமையில் இருத்த தீஅணைப்பு நிலையத்தில் இருந்த 
முதலுதவி பெட்டியின் மூலம் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது 

இருப்பினும் அவர் தலையில் இருந்து வழிகின்ற ரத்தம் நின்றபாடில்லை 

அடுத்த 5 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் அந்த இடத்தை வந்தடைந்தது

அவர்கள் அவரை அதில் ஏற்றி விட்டு கொண்டு சென்றனர்

அந்த காவல் அதிகாரி அந்த பேருந்தை ஓரம்கட்டி, அந்த நடத்துனர்
மற்றும் ஓட்டுனரை போலீஸ் அதிகாரி விசாரிக்க தொடங்கினர்


அதற்குள் வேறு பேருந்து வந்துவிடவே நான் அதில் ஏறி கொண்டேன்
என்னை போல சிலரும் அந்த பேருந்தில் இருந்து இறங்கி வேறு பேருந்தில்
ஏறி கொண்டனர்

நான் வழக்கம் போல அலுவலகத்திற்கு சென்று எனது
அன்றாட அலுவல்களை செய்ய துவங்கினேன், ஏனோ மனம்
அதில் லயிக்கவில்லை

இந்த சம்பவம் இனி எவனை என்ன செய்யபோகின்றது என்று
பொறுத்திருந்து பாப்போம் 

தேடல் தொடரும்...








No comments:

Post a Comment